சீரகம்
சீரகம் = சீர்+அகம் ; அகத்தை சீராக வைத்துக்கொள்ளும்; அதாவது "அகம்" என்பது "உடலுக்கு உள்ளே" என்று குறிப்பிடப்படும்.
சீரகம் உடலில் உள்ள பித்தத்தை தன்னிலைப்படுத்தி "இரத்த பித்தம்" என்னும் நோய் நிலைமையை குணப்படுத்துவதில் சிறந்தது.
சீரகத்தில் உள்ள "அகட்டுவாய் அகற்றி" செய்கை, இரைப்பையில் (வயிறு) உள்ள வாயுவை அகற்றுவதுடன், பசியையும் தூண்டும்.
சீரகத்தின் மருத்துவ பயன்கள்:
- சீரகத்தை பொடித்து வெண்ணையுடன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் கொடுக்க "எரி குன்மம்" தீரும்.
- சீரகம், சுக்கு, ஏலம், நெல்லிவற்றல் - இவை அனைத்தும் சம அளவு எடுத்து பொடித்து சூரணித்து கொள்ளவும். இதனுடன் அரை பங்கு சர்க்கரையை பொடித்து சேர்த்து கலந்து கொள்ளவும். மூன்று விரல் அளவு காலை மாலை தினமும் உட்கொள்ள உடலில் உள்ள "தீக்குற்றம் தன்னிலைப்படும்".
regards,
SRI SKANDA SIDDHA CLINIC
No comments:
Post a Comment