Tuesday, 28 May 2013

“உடலுக்குள் ஒரு பயணம்”

உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குவதற்கு எளிய வழிமுறைகள்
üநம் உடல் ஒரு நடமாடும் இயந்திரம் போன்றது. ஒரு இயந்திரம் செயல்பட அதற்கு சீரான மின்சாரம் இன்றியமையாதது

üஅது போல நம் உடலுக்கு சீரான இரத்த ஓட்டம் இல்லாத பொது உடலில் உள்ள முக்கிய உறுப்புகள் தன் செயல் தன்மையை மெதுவாக இழக்கிறது

üஇது நாளடைவில் தொடர்ந்து கொண்டிருக்கும் போது உடலானது பல அறிகுறிகளை வெளிப்படுத்தும்
üஇதனை புரிந்து கொண்டு நாம் மருத்துவரை அணுகி மருத்துவத்தை மேற்கொண்டு நோயில் சிக்கிய உடலை மீட்கலாம் 

üஅதனை கவனிக்காமல் இருக்கும் போது திடீரென்று ஒரு நாள் மரணத்தின் பிடியில் சிக்கித் தவிக்க நேரிடலாம்

üஆகையால் திருமூலரின் வாக்குப்படி, "நம் உயிர் என்னும் ஆன்மா குடிகொண்டிருக்கும் கோவில் தான் நம் உடல், கோவிலை தூய்மையுடன் வைத்திருந்தாள் தான் ஆன்மாவால் நீண்ட நாள் நிலைத்திருக்க முடியும்

üஅதற்கான வழிமுறைகளை வழங்குகிறோம்

1.சுடுநீர் அல்லது குளிர்ந்த நீர் குளியல்
vஇரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் ஒரு சிறந்த வழியாகும்
 
vவலியால்  பாதிக்கப்பட்ட பகுதியை வெந்நீரில் கழுவும் போதும் அல்லது ஒற்றடம் கொடுக்கும் போதும் உடலில் ரத்த ஒட்டம் அதிகரிக்கும்
 
vஒரு உடனடி குளிர் குளியல் உள்ளுறுப்புக்களில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்
v குளியலின் போது உடலில் ஏற்படும் நடுக்கம், இரத்தம் சருமம் வழியே பாய்ந்து பிராண வாயுவை விட்டுச் செல்கிறது என்பதற்கு அறிகுறியாகும்
v இந்த வெப்ப மற்றும் குளிர் நீர் சிகிச்சை முறைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்

v வெந்நீர் குளியலின் போது நீரானது கொதிக்கும் நிலையில் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும், இல்லையெனில் அது தீக்காயங்கள் ஏற்பட காரணமாகலாம்

2.மூச்சு பயிற்சி:
vபெரும்பாலான மக்கள் மோசமான சுவாச பழக்கங்களை கொண்டிருக்கின்றனர்
v நம்முடைய நுரையீரலில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்
v இரத்த ஓட்டத்தை மேம்படுத்த நுரையீரலின் முழு திறனையும் பயன்படுத்த வேண்டும்
vஅதற்கு ஆழ்ந்து சுவாசிக்க வேண்டும்
vஇது இரத்தம் அதிக அளவு பிராணவாயுவை பெற வழி வகை செய்யும்
v அத்துடன் கழிவு பொருட்களை நீக்கவும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவும்

3.மன அழுத்தத்தை தவிர்த்தல்

vமன அழுத்தம் இரத்த ஓட்டத்தில் சீர்குலைவை ஏற்படுத்தும் மிக முக்கியமான மற்றும் முன்னணி காரணங்களில் ஒன்றாகும்

v ஒருவர் மனஅழுத்தத்திற்கு ஆட்படும் போது முக்கிய உறுப்புகளுக்கு மட்டுமே இரத்தம் செல்லும் மற்ற உறுப்புகளுக்கு இரத்தம் செல்லாது

vஇது மோசமான பின் விளைவுகளை உருவாக்கும்

v கைகள் மற்றும் கால்கள் இதனால் மோசமாக பாதிக்கப்படும்

v எனவே இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதற்கு மன அழுத்தத்தைத் தவிர்ப்பது மட்டுமே ஒரே சிறந்த வழியாகும்

v தினமும் உடற்பயிற்சி செய்வது, ஆழ்ந்து சுவாசிப்பது மற்றும் தியானம் செய்வது போன்ற எளிய நடைமுறைகள் மன அழுத்தத்தை குறைத்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும்

4.பாதத்தை உயர்த்துதல்

vகுறுகிய கால அளவிற்கு பாதத்தை உயர்த்துதல் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் பயனுள்ள வழி ஆகும்

v படுக்கையில் படுத்துக் கொண்டு காலடியில் ஒரு தலையணை வைப்பதன் மூலம் இதை செயல்படுத்தலாம்

vஇது இரத்தம் தலையை நோக்கி பாய்வதற்கு வழி வகுக்கும்

vஇந்த செயல்முறையில் தரையில் படுத்துக் கொண்டு ஒரு நாற்காலி அல்லது சோபா மீது கால்களை மாற்றி மாற்றி வைக்க வேண்டும் 

vஅவ்வாறு செய்வது இரத்தம் கால்களை விட்டு நீங்குவதற்கு உதவும்

vசிலருக்கு பாதங்களில் இரத்தம் தேங்கி நின்று வீக்கத்தை ஏற்படுத்தும் நிலையில் இந்த முறை சிறந்த பலனை தரும்

5.உடற்பயிற்சி
vஉடல் உழைப்பு மட்டுமே இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும் மிக நிச்சயமான வழியாகும்
v பெரும்பாலான மக்கள் இன்று எந்த ஒரு உடல் உழைப்புமின்றி உட்கார்ந்த நிலையிலேயே பணியாற்றுகின்றனர்

v வழக்கமான உடற்பயிற்சி, நடைபயிற்சி, நீச்சல் மற்றும் ஓட்டப்பயிற்சி ஆகியன இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்

v எனினும் நடை பயிற்சியின் போது நிலையான வேகத்தில் ஆரம்பித்து படிப்படியாக வேகத்தை அதிகரிக்க வேண்டும்

6.சமச்சீர் உணவு
vஉட்கொள்ளும் உணவு இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது

vஒரு ஆரோக்கியமான உணவு பழக்கம் என்பது கொழுப்பு மிகுந்த உணவை குறைத்துக் கொள்வது தான்
vஇதனால் இரத்த ஓட்டம் உடலில் அதிகரிக்கும்.

vகுறைந்த கொழுப்பானது இரத்தம், சிறிய நாளங்கள் வழியாக எளிதாக செல்ல உதவுகிறது

v உணவில் நார்ச்சத்து மிகுந்த உணவை உட்கொள்வது, கொழுப்பை குறைத்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும்


"உடல் என்னும் மந்திரக்கூடு"
üஉடல் என்னும் மந்திரக்கூடுக்கு, குருதி (இரத்தம்) தான் அதன் மந்திரச்சாவி. இந்த இரத்தம் உடலில் சீராக செயல்பட, மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றி நலமாக வாழுங்கள். 

நன்றி!!! வணக்கம்!!! 

with Regards,
SRI SKANDA SIDDHA CLINIC

No comments: