“உருத்திராட்சம்” என்பது ‘உருத்திரனாகிய
சிவபெருமானின் கண்களிலிருந்து
தோன்றிய நீர் ஆகும்’.
அதாவது, ‘தேவர்கள் அசுரர்களால் வதை படும் துன்பத்தினை
தாங்க முடியாமல் உருத்திரனின் கண்களிலிருந்து வடிந்த நீரே “ உருத்திராட்சம்”
ஆனது.
இதில் ‘உருத்’ என்பது
‘துக்கம்’ என்றும், ’ரன்’ என்பது
‘ஓட்டுபவன்’
என்றும் பொருள்படும். “உருத்திராட்சம்”
என்பது ‘துக்கத்தினை ஓட்டுவது’
அல்லது ‘துக்கத்தை வெளிப்படுத்துவது’ என்று
பொருள்.
இது
- சிவநேத்திரம்
- அக்கமணி
- கண்மணி
என்று
பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.
· சிவநேத்திரம்
என்பது ‘சிவபெருமானின் கண்களிலிருந்து தோன்றியதால் இப்பெயர் பெற்றது.
- அக்கமணி என்பது ‘அண்டசராசரத்தை ஆளும் தலைவனுடைய கண்களிலிருந்து வந்த மணித்துளி’ என்று பொருள் படும்.
· கண்மணி
என்பது 'கண்களிலிருந்து வடிந்த கண்ணீர்த்துளி என்று
பொருள்படும்.
இந்த
மணித்துளி புனித ஆகாய கங்கையை
காட்டிலும் சிறந்ததாக கருதப்படுகிறது. எனவே இதனை அணிந்தவர்கள்
“புனித ஆகாயகங்கையில்
மூழ்கியதை
காட்டிலும்
அதிக
நற்பயன்களை
பெறுவார்கள்” என்பது குறிப்பிடத்தக்கது.
- இது “ஐயத்தினால் ஏற்படும் மரணத்தினை” தடுக்கும் “காயகற்ப மூலிகை” ஆகும்.
- உருத்திராட்சத்தை கொண்டு செய்யப்படும்"உருத்திராட்சக்கருக்கு" என்னும் மகிமை வாய்ந்த மருந்து 'கப நோய்களை வேருடன் அழிக்கக்கூடிய' ஈசனின் வல்லமைப் பெற்றது.
உருத்திராட்சத்தின் புறத்தோற்றம்:
.........................................................................................
.........................................................................................
உருத்திராட்சத்திற்கு மூன்று முக்கிய பகுதிகள்
உள்ளன.
அவை,
- இயற்கையாக அமைந்துள்ள நீண்ட துளை
- முகங்கள்
- உடல் பகுதி ஒழுங்கற்ற வடிவத்திலும் காணப்படுகிறது.
உருத்திராட்சத்தின் வகைகள்:
..............................................................
..............................................................
- உருத்திராட்சத்தின் வகைகளை கூறும் போது அதன் முகங்களின் எண்ணிக்கையை வைத்தே வகைப்படுத்தப்படுகிறது .
- இதில் ஒரு முகம் உருத்திராட்சம் முதல் பன்னிரெண்டு முகம் உருத்திராட்சம் வரை உள்ளது.
ஆக்கமும்
செயலாக்கமும்,
ஸ்ரீ ஸ்கந்தா சித்த மருத்துவ
நிலையம்
சென்னை
தொடர்புகொள்ள:
அலைபேசி எண்: +91-9710083268
மீண்டும் வருக!!! வருக!!! வருக!!!




No comments:
Post a Comment