அஞ்சறைப் பெட்டிக்குள் அற்புத மருத்துவம் நம் சித்த மருத்துவம்:
மிளகு:
மிளகு என்று கூறும்
போது முதலில் நம் ஞாபகத்துக்கு வருவது இந்த கிராமத்து பொன்மொழி தான், "பத்து மிளகு இருந்தால் பகைவன்
வீட்டிலும் உணவு அருந்தலாம்". காரணம் மிளகு உணவில் உள்ள நச்சுத்தன்மையைப் போக்க வல்லது.
· மிளகு
ஒரு கொடி வகையினைச்
சார்ந்த தாவரமாகும். மிளகுக் கொடியின் பிறப்பிடம்
தென்னிந்தியா ஆகும்.
தென்னிந்தியாவில் குறிப்பாக கேரளாவில் பெருமளவு மிளகு பயிரிடப்படுகிறது.
ஆகையாலே மிளகிற்கு
“மலையாளி”
என்ற வேறு பெயரும் உண்டு.
இது உணவின்
சுவைகூட்டும் பொருளாகவும் மற்றும் உணவில் உள்ள நச்சுத் தன்மையை நீக்கும் சிறந்த எதிர் மருந்தாகவும் உலகமெங்கும் பயன்படுத்தப்படுகிறது.
"மிளகு சித்த மருத்துவ முறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது"
- செரியாமை
- வயிற்று வலி
- குடல் புண்
- வயிறு உப்புசம்
- சளி, கோழை, இருமல்
- சுரம் (காய்ச்சல்) நீக்குவதற்கு மிளகை பொடித்து கொஞ்சம் தேன் கலந்து தினமும் இருவேலை உணவுக்குப்பின் சாப்பிடவும்.
மிளகுத்தூள் 50 கிராம் எடுத்து 700 மி.லி
நீரில் போட்டு அரை மணி நேரம் காய்ச்சி வடிகட்டி அதில் 30-60 மி.லி வீதம் தினம் 2 முறை
குடித்து வர,
- தொண்டைக்கம்மல்
- தொண்டைப்புண்
- வயிற்றைச் சேர்ந்த நோய்களும் நீங்கும்.
இதில் உள்ள இயற்கையான காரமும், மணமும்
உணவைச்
செரிக்க வைப்பதுடன், வயிற்றிலுள்ள வாயுவை அகற்றும்
தன்மை கொண்டது.
with regards
SRI SKANDA SIDDHA CLINIC
sriskandawellnesscentre.blogspot.com
Cell: 97100 83268
SRI SKANDA SIDDHA CLINIC
sriskandawellnesscentre.blogspot.com
Cell: 97100 83268
2 comments:
Nice things Sir
Post a Comment